என் நண்பரும் இசைவிமர்சகருமான ஷாஜி ஆங்கிலத்தில் தனது புதிய வலைப்பக்கத்தை துவக்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உயிர்மை இதழில் அவர் எழுதி வருகின்ற மேற்கத்திய இசை மற்றும் இந்திய திரையிசை சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பரந்த வாசகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
ஷாஜி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். இவரது கட்டுரைகளை ஜெயமோகன் தமிழாக்கம் செய்துவருகிறார். பல்வேறு புகழ்பெற்ற இசை நிறுவனங்களில் ஆலோசகராக , நிர்வாகியாக பணியாற்றியவர். தமிழ் திரையிசை குறித்து விரிவான அறிதலும் தனித்துவமான பார்வைகளும் கொண்டவர் ஷாஜி. மலையாளம் மற்றும் ஆங்கில இதழ்களில் இசை குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
கடந்த ஆண்டு இவரது சொல்லில் அடங்காத இசை என்ற புத்தகம் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது புத்தக வெளியீட்டில் நான் கலந்து கொண்டேன். புத்தக வெளியீட்டோடு மெஹ்தி ஹசனின் கஜல்களை பாடகர் ஸ்ரீனிவாஸ் பாடியது மறக்க முடியாத அனுபவம்.
ஷாஜி வலைப்பக்கத்தின் சிறப்பம்சம் கட்டுரைகளுடன் அதில் குறிப்பிடப்படும் இசையையும் உடன் கேட்க முடியும் என்பதே. இசை ரசிகர்களுக்கு அவரது வலைப்பக்கம் நிச்சயம் தனித்துவமானதொரு அனுபவம் தருவதாக இருக்கும்.
http://shajiwriter.blogspot.com